Saturday, April 27, 2019

Srinivasa Ramanujam - The man who knew INFINITY

பிராமணன் என்பதால் மறைக்கப் பட்ட கணித விஞ்ஞானம்
#Srinivasan_Ramanujam
கணிதம் எல்லோருக்கும் புரியாது, அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.

அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.

ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடங்களிலும் மதிப்பெண் குறைவு, குறிப்பாக ஆங்கிலத்தில் பெயில். ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை," பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு" எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,

ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.

"கொடிது கொடிது இளமையில் வறுமை" என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை

எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.

யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார், லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.

எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,

திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில‌ கணித ஆசிரியர்.

மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்

"எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்", கண்கலங்கினான் அந்த அதிகாரி, அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.

சொந்த இனம் செய்யா உதவியினை அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.

காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.

நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக‌ என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.

சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.

படிக்க லாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் "Fellow of the royal Society"

உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.

அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.

அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.

5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.

அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், எப்படிபட்ட கொடுமை இது? பிறகு ஏன் காவேரி வற்றாது?

நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற‌ "மாக் தீட்டா பங்க்சன்ஸ்",

32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.

புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.

அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை (அன்னை சத்யபாமாவிற்கு அங்கு கோயிலே உண்டு), ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல பைபிள்.

பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை. அண்ணாவிற்கும், பெரியாருக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.

உண்மையில் தமிழ்நாடு பொறியியல்  பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது, அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் மூச்.

இப்படி எல்லாம் அழிக்கமுடியாத வரலாறான அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.

இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டுகொண்டிருக்கின்றது

கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் நினைவு நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்

தமிழகத்து ஐன்ஸ்டீன் அவன்..முடிவிலி தத்துவத்தை சொன்ன முடிவில்லா புகழுக்கு சொந்தக்காரன்.

ஜெய் ஹிந்து

Thursday, May 11, 2017

பயம்

கவலையால் வாழ்ககையை வென்றவர் எவருமில்லை. கவலையை வென்றுவிடு. பயமே உன்னை மிரட்டுகிறது. துணிந்துவிடு. இதுவே வெற்றியின் முதற்படி.


மனிதனுக்கு எதிரி வெளியில் இல்லை. அவனே தான் தனக்கு  எதிரி. அவன் சீர் படுத்தாத அவன் மனமே எதிரி. அந்த மனத்தின் பயமே முதல் எதிரி. பயந்தவன் வாழ்ந்ததில்லை.

பெரியோர் சொல்

பெரியோர் அறிவுரைகளை மதிக்காதவன் வாழ்வில் வீழ்கிறான்.

பெரியோர் பேச்சைக் கேட்டு அதன் மெய்ப் பொருளை உணர்ந்து தன் வழியில் செயல்படுபவன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறான்.

The one who reminds the advice of elders before doing anything, is the one who travels in the path of success.

Monday, May 8, 2017

வாழ்ககை

வாழ்ககை ஒரு வழி பாதை. போனது போனதுதான். போனதை நினைத்து வருவதை காண தவறிவிடாதே. தவறுவது இந்த கணம் மட்டுமில்லை. வாழ்ககை என்பதை நினைவில் கொள். வருவதை மட்டும் எதிர் நோக்கு. ஏற்றுக்கொள். வாழ்ககை நிம்மதியாய் நகரும்.

பிறர் செய்த தவறுக்கு நமக்கு நாமே கோடுக்கும் தண்டனை தான் கோபம். கோபம் முதலில் நம்மை பாதிக்கும். வலுவிழந்த பின்னர் தான் மற்றவர் மீது பாயும்.

Thursday, April 6, 2017

ஆசையும் திறமையும்

ஆசையும் திறமையும்

திறமை ஒருவரின் தனித்தன்மையை வெளிபடுத்துவது. அவர் அதில் முழுமையாக ஈடுபடும் பொழுது அவர்கள் திறமை வளர்ந்து பல சாதனைகள் புரிகிறார்கள். திறமையை வளர்கக ஆசை ஒரு உந்துகோல். திறமையில்லாது வெறும் ஆசைகொள்வதால் மட்டுமே சாதிக்க இயலாது. அவர்கள் ஆசையை வளர்த்து மயக்கத்தில் வாழ்பவர்கள். திறமையுள்ளவர்கள் மட்டுமே சாதிக்கின்றனர். 

Thursday, September 22, 2016

EGO

EGO இருக்கும் வரை வாழ்வில் இழப்புகள் இருந்துகொண்டே இருக்கும். EGOவை இழக்கும் நிலை வந்தும் அதை விடாதவன் வாழ்ககையை இழப்பான்.

தவறை சுட்டிக்காட்டி சரியான வழியையும் காட்டிய பின் தான் நினைத்ததையே செய்பவன் தன் முட்டாள்தனத்தை புத்திசாலித்தனம் என எண்ணிக்கொள்கிறான்.

தன்னிடம் இருப்பதை வைத்து வாழத் தெரியாத திறமையற்றவன் இல்லாத ஒன்றை உருவாக்கி வாழ்வேன் என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

Tuesday, September 13, 2016

1

நம்மிடம் தேவைக்கு மீறி இருப்பதை பிறருக்கு கொடுப்பதால் நமக்கு கேடொன்றுமில்லை.

பிறர் பொருள்மீது கொள்ளும் மோகம் நமக்கு இழப்பைத் தரும்.

பிறருக்கு கொடுக்க நம்மிடம் பொருள் இல்லையென்றாலும் நாம் அறிந்தவற்றை பிறரிடம் பகிர்வதும் ஒரு தானம் தான். அது நம்மை மேன்மையடையச் செய்யும்.

உலக நிகழ்வுகள்யாவும் எந்த எதிர்பார்ப்புமின்றி  இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனோ செய்யும் செயல் அனைத்திலும் சுயநலத்துடன் பிறரை வருத்தியும் தானும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து வாடுகிறான்.

பத்து நாட்களுக்கு தேவையான உணவை ஒரே நேரத்தில் உண்ண இயலாது. மீறி உண்டால் துன்பம் தான். அதே போல் பத்து நாட்களில் சேர்க்க வேண்டிய செல்வத்தை ஒரே நாளில் ஈட்ட நினைப்பதன் விளைவும் துன்பம் தான்.

பயம் என்பது ஒரு கொடிய நோய். அது பற்றிக்கொண்டால் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் துன்பம் தான்.